வணக்கம் ரெண்டாயிரத்துப் பதிமூன்று ! எத்தனைப் பதிவுகள் கடந்த நான்கு வருடங்களாக எழுதியிருந்தாலும் , இந்த ஆண்டின் முதல் பதிவை நான் எழுத முற்படுகையில் , வழக்கமான உற்சாகம் ஏனோ இல்லாது போனதிற்கு " ஆண் " எனும் என் இனத்தின் மீதே வெறுப்பு கூட ஒரு காரணமாயிருக்கலாம் ! தலைநகரின் சமீபத்திய நிகழ்வு , ஒரு ஆணாய் என்னை வெட்கப்பட வைக்கிறது என்றால் மிகையில்லை ! மிருக மனம் படைத்த ஆண் நடமாட்ட சமுத்திரத்தில் , ஒரு பெண் தனியே சுதந்திரமாய் நடமாட முடிகிற வரையில் , " நமக்கு சுதந்திரம் என்பது இல்லை " என்று காந்தி சொன்ன வார்த்தைகள் இன்னும் நிதர்சனமாய் , நம்மை ஒட்டுமொத்தமாய் குற்றவாளிகளாக ஆக்கியிருக்கிறது ! பெண்கள் இல்லாத வாழ்க்கை என்பது இல்லை ! பெண்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்பதே உண்மை ! மனைவியே ஆனாலும் " புரிதல் " என்பது இல்லாது போனால் அங்கேயே சமூக பிரக்ஞை பிறழ்ந்து போகிறது ! ஊடகங்களில்...
Posts
Showing posts from 2012
- Get link
- X
- Other Apps
நாநோவைத் தொடர்ந்து வெர்னா! சென்ற சனிக்கிழமையன்று ( 29.09.12) அகிலனின் ஒன்பதாவது பிறந்தநாள்! அவனுக்கு ஒரு பெரிய பரிசை அளிக்க ஆசைப்பட்டேன்! அது ஒரு HYUNDAI FLUIDIC VERNA - வாக இருக்க வேண்டும் என்பது கடவுளின் சித்தமாயிருந்தது! மனோ விருப்பப்படி PURPLE FANTASIA கலர்! நாநோவிலிருந்து வெர்னா - ஒரு பெரிய அடி எடுத்து வைப்பதை உணராமல் இல்லை! இருந்தாலும் அதன் மிடுக்கிலும் அழகிலும் என்னையும் அறியாமல் என் மனதை பறிகொடுத்தேன் என்பதே உண்மை! VERNA - இதோ எங்களோடு சேர்ந்து பயணிக்க துவங்குகிறது!
ஆதலின் காதல் செய்வீர்!
- Get link
- X
- Other Apps
மறுநாள் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் விமான நிலையம் புறப்பட வேண்டும் ! எதையும் மறக்காமல் , துலக்குவதற்கு பிரஷிலிருந்து , குளிருக்கு ஸ்வெட்டர் வரை , சார்ஜரிலிருந்து அமிர்தாஞ்சன் வரை ! எதுவும் விட்டுப் போகாமல் , ஒரு அவசர கதியில் நானும் மனோவும் செயல்பட்டுக் கொண்டிருக்க , தனியாக விளையாடிக் கொண்டிருந்த மகன் அகிலனின் அழுகுரல் திடீரென்று கேட்கவும் , விழுந்து அடித்துக் கொண்டு பால்கனி சென்று பார்க்கையில் , அவனது இடது புருவத்துக்கு மேலிருந்து இரத்தம் பீரிட்டு வழிந்து கொண்டிருந்தது ! ஒரு கணம் மனதில் எல்லாம் வாஷ் அவுட் ஆன மாதிரி ஒரு பிளாஷ் வந்து சென்றது ! யோசிக்க அவகாசம் இன்றி , அவனை தூக்கிக்கொண்டு இசபெல் மருத்துவமனை ஓடினோம் ! நேரம் இரவு மணி எட்டு ! டிரெஸ்ஸிங் முடிந்ததும் , அநேகமாக தையல் போட வேண்டியிருக்கலாம் என்று இருக்கையில் , எமெர்ஜென்சி மருத்துவர் , ஒரு ஸ்டிக்கர் டேப் ஒட்டினால் போதுமானது ; டி டி இன்ஜெக்சன் போட்டு கொள்ளட்டும் என்றதும் , நெஞ்சில் லேசாக , மறுநாள் தில்லி செல்வோம் என்று ...