என் இனிய கிரெட்டா...!

உன்னோட நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறவாது கிரெட்டாவே...! பத்து வருடங்களுக்கு முன் உன் கொரிய அண்ணன் "வெர்ணா" நான்கு வருட பந்த பாசத்திலிருந்து எங்களை விட்டு பிரிந்து சென்ற சோகத்தினை சில நாட்களிலேயே அழகிய உன் "செவ்வண்ணச்" சிரிப்பால் மறந்திடச் செய்தாய்...! *என்னால்" இயக்குவதிலிருந்து "தன்னால்" இயங்குபவனாய் ஆன எந்திரனைப் பெற்ற உன்னை இயக்குவது எவ்வளவு சுலபம் என வந்த சில நாட்களில் சொல்லாமல் சொல்லி எங்களை சொக்க வைத்தாய்...! தென்குமரி, வட திருப்பதி தொடங்கி நெல்லூர், அதிரம்பள்ளி, பெங்களுர் ஆகிய அண்டை மாநிலங்கள் வரை அம்பை, பம்பை என பம்பரமாய்ச் சுழன்று நீ எங்களை கூ(ஓ)ட்டிச் செல்லாத இடம் தான் உண்டோ...? ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கிலோமீட்டர்கள் என்கிறது உன் ஓடோமீட்டர்...! வருடங்கள் பத்து ஆயிற்று நீ வந்து என காலம் உணர்த்துகிறது...! ஆனாலும் மனம் அதை ஏனோ ஒத்துக் கொள்ள மறுக்கிறது...! எரிபொருளில் 20 சதவிகிதம் எத்தனாலை அரசாங்கம் படிப்படியாக கலந்திடத் துணிந்ததால் உன் இதயத்திற்கு அபாயம் என உணரத் துவங்குவதற்கு சாட்சியாக உன் செயல்பாட்டில் சற்றே ...