Posts

Showing posts from March, 2024

திருப்பள்ளியெழுச்சி

Image
நான் தினமும் காலையில் விழிக்கும் பொழுது... அருகில் நீ இன்னும்  நித்திரை கலையாதிருக்கின்றாய்... கலைந்து கிடக்கும் உன் கேசம்... அதில் முழுவதுமாய் வியாபித்திருக்கும்  பெண்ணே உன் வாசம்...! உன்னை எழுப்ப மனமில்லாமல் உன் முகம் பார்த்து காத்திருப்பேன்.. நான் முழித்தது உணர்ந்து மெல்லிதாய் விழித்தும் விழிக்காமல் கண்களைத் திறந்து மூடிக்கொள்வாய்.. "இன்னும் கொஞ்சம் நேரம்ப்பா" உன் குரல் கொஞ்சலாய் கெஞ்சும்... நெற்றிப் பொட்டு இடம் மாறி இமைதனில் ஒட்டிக் கொண்டிருக்கும்.. சிரித்துக் கொள்வேன்... வறண்டிருக்கும் உன் இதழ்களுக்கு முத்தங்களால் ஈரம் நனைத்திட்டு என்னை மெதுவாய் உன்னிடத்திலிருந்து  விடுவித்திக் கொள்ள முயற்சிப்பேன்... மீண்டும் என்னை  இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டு செல்லமாய் வன்முறை செய்கின்றாய்..! என்னை தினசரி  கொல்லாமல் கொல்கின்றாய்..! "தோழியே ....காதலியே...!  போதும் எழுந்திடு..!" எனக் கரையும் உன் காதலனின்  திருப்பள்ளியெழுச்சி  உன் செவிதனில் விழவில்லையா?? நம் காதலின் செய்திகள் தரவில்லையா?? பா. மணிகண்டன்

பண்ணப் பழகடா பச்சை படுகொலை...!

Image
  சமீபத்தில் புதுச்சேரியில்  அரங்கேறிய நிகழ்வு, தலைநகரின் 'நிர்பயா' சம்பவம் விளைவித்த அதிர்வலைகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல...! பிஞ்சுகளையும் புசிக்கத் தயங்கா காமுகர்களின் அரக்க குணம் போதை வஸ்துவின் புழக்கத்தால் தூண்டப்பட்ட ஒன்று எனக் காரணம் அறியப்பட்டாலும், பலியான அந்த குழந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பிராயச்சித்தம் எப்படித் தேடுவது? என்ன பாவம் செய்தது  அந்தப் பெண் குழந்தை?? அதனைப் பாதுகாக்கத் தவறியது யார் குற்றம்? அதனைப் பெற்றோரா? இல்லை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த இந்தச் சுயநல சமூகமா? சட்டம் ஒழுங்கை கண்காணிக்கத்  தவறிய காவல் துறையா? இல்லை அந்தக் காவலர்களை தங்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பாதுகாப்பு செய்திடப் பணித்த அரசியல்வாதிகளா? இல்லை இவற்றினையெல்லாம் அரங்கேற்றி வேடிக்கை பார்க்கும் அந்த மகா சக்தியா? இல்லை அப்படி ஒன்று தான் உளதா? கேவலமான இந்த அவலங்களைப் வெறும் செய்தியாக  கேட்டுக் கடந்து போகாமல், பாட்டன் பாரதிதாசன் சொன்னது போல... "பண்ணப் பழகடா பச்சை படுகொலை" எனும் அடிப்படையில், இதன் ஆணிவேர் எதுவோ, யாரோ.... அதனை பாரபட்சம் காட்டாது வேரோடு உடனடியாக...