Posts

Showing posts from March, 2020

கண்ணுக்குத் தெரியாத அரக்கன் ...!

Image
வாழ்க்கை எவ்வளவு நிச்சயமற்றது என்பதனை புரிந்து கொள்ள நமக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.  மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் இங்கே கற்பிக்கப்படுவது என்ன?  எதைச் செய்தால் சாதனை என்று பார்க்கப்படுகிறது? நன்றாக படிக்க வேண்டும்; நல்ல கல்லூரியில் இடம் வேண்டும்; நல்ல வேலையில் சேர வேண்டும்; நல்ல சம்பாத்தியம் செய்ய வேண்டும்;  மகிழுந்து ஓட்ட வேண்டும்; வீடு வாங்க வேண்டும்; நல்ல  வாழ்க்கைத் துணையினை அடைய வேண்டும்; நல்ல குழந்தைகளை பெற வேண்டும்; பிறகு பெற்றக் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்; அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும், அது வரை ஓடிக் கொண்டிருக்க வேண்டும்; தத்தமது குடும்பத்திற்காக பொருள் ஈட்டுவதிலேயே காலம் கடத்த வேண்டும்; பின்பு நாம் சரியாகத் தான் வாழ்ந்து வந்துள்ளோமா என்று ஆராயக் கூட அவகாசமில்லாமல் ஒரு நாள் மரித்தும் போய்விட வேண்டும்.   இதற்குள் எத்தனை எத்தனையோ நல்ல அல்லது தீய குணநலன்களை வளர்த்துக் கொண்டும் அல்லது அனுபவித்துக் கொண்டும் காலம் தள்ளுகின்றோம்.  எது சரி அல்லது எது தவறு என்ற எந்தப் புரிதலும் இல்லாம...

கரீ(ரோ)னா வைரஸ்...!

Image
எதேச்சையாகத் தான் நடந்தது அது! "பீனிக்ஸ் மால்" பார்க்கிங்  வளாகத்தில் காரைப் பார்க் செய்து விட்டு கதவைத் திறக்கும் போது, அருகில் பூனையாய் ஒரு கருப்பு ஆடி மெல்ல ஊர்ந்து வந்து சேர்ந்தது.  அதிலிருந்து அந்தப் பெண் இறங்கி தன் தீர்க்காமான நெற்றியில் படர்ந்த கேசத்தை சரி செய்ய முயல, அவள் கைகளில் இருந்து வாலட் கீழே விழுந்து, காரின் அடிப்பகுதியில் சென்று விட, அதை எடுக்க முயன்றுத் தோற்று, மேலே எழும்பியவள், நான் பார்ப்பதைப் பார்த்ததும், "இஃப் யூ டோன்ட் மைண்ட்" என்றதும், காத்திருந்தவனாய் "ஸ்யூர்" என்று, குனிந்து எடுக்க முயல, அருகில் நின்று கொண்டிருந்தவளின் முடிவிலியான முழங்காலை முழுமையாகப் பார்க்க நேரிட, புழுக்கத்தில் வியர்வை சட்டையை நனைத்து விட்டிருந்தது.  வாலட்டை எடுக்கும்போது அதிலிருந்து அவளது விசிட்டிங் கார்டு ஒன்று வெளியேற, அதனை லாவகமாய் மறைத்து, வாலட்டை மட்டும் எடுத்துக் கொடுத்ததும், " வெரி கைண்ட் ஆஃப் யூ" எனச் சர்க்கரையாய் ஒரு புன்முறுவல் செய்து, கை கொடுத்து விட்டு, "யூ ஆர் ஸ்வெட்டிங்" அன்று குறும்பாய்ச் சொல்லிச் சென்றாள்.  அவள் ...