Posts

Showing posts from July, 2016

கபாலி

Image
வெகுஜன, இணைய, பத்திரிக்கை மற்றும் வாய்ச்சொல் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு திறந்த மனதோடு கபாலி படம் பார்க்க நேற்றுச் சென்றிருந்தேன்! கனத்த மனதோடு திரும்பி வந்தேன்! இப்படி ரஜினியைப் பார்த்து தான் எவ்வளவு நாளாயிற்று! சிறையில் புத்தகம் படிப்பதில் துவங்கி இறுதியில் நிறைவாய் தன் குடும்பத்தினருடன் மனதிற்குப் பிடித்தமான வாழ்க்கையைத் வாழத் துவங்கும் வரை எவ்வளவு இயல்பாய், நேர்மையாய், யதார்த்தமாய் அந்த கதாபாத்திரம் பயணிக்கிறது!! "தன் அன்பு மனைவியைத் தேடுதல்" எனும் ஒற்றை நோக்கத்திலிருந்து துளியும் பிறழாமல் கண்ணில் தேடலையும் நெஞ்சில் வலியையும் நடை உடை பாவனையில் மிடுக்கையும் தவற விடாது அடுத்தடுத்த காட்சிகளில் தன்னுடன் இருப்பவர்கள் முதல் தன்னை திரையில் பார்க்க வந்திருக்கும் ரசிகர்கள் வரை அனைவரையும் தன்னோடு அரவணைத்துச் செல்ல வைத்திருக்கும் படியான ஒரு ஈர்ப்பினை படத்தின் ஜீவநாடியாய் உலவ விட்டிருப்பத்தில் இயக்குனர் பா ரஞ்சித் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருப்பதில் வெற்றியும் கண்டிருக்கிறார் என்றால் அது மிகையில்லை! இது ரஜினி படமா இல்லை ரஞ்சித்தின் படம...

ஏலே மக்கா...!

Image
"ஆச்சிக்கு வயது 97 நடக்கிறது! இப்பொழுதெல்லாம் அவர்களுக்கு முன்பு போல முடிவதில்லை! கண்கள் ஒத்துத்துழைத்தாலும் காதுகள்...? அடிக்கடி "சிவ சிவா"வைத் தவிர வாயும் அதிகம் வார்த்தைகளை உதிர்ப்பதில்லை! அவர்களால் முடிந்தால் அழைத்து செல்லுங்கள்!" மாமா சென்ற திங்கள் சொன்னது இன்னமும் என் காதுகளில் ஒலிக்கத் தான் செய்கிறது! இருந்தாலும் பிடிவாதமாய் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்தேன்! அப்போது தெரியாது இதுவே ஆச்சியின் இறுதி வருகை என்று..! என் வீட்டில் அவர்கள் கடைசியாக இருந்து சென்ற அந்த இரெண்டு நாட்களில் அவர்கள் நின்றதும், நடந்ததும், பேசிய ஓரிரு சொற்களும் பசுமையாய் ஞாபகத்தில் இன்னும் இருக்கிறது! தலையில் பொடுகோ அல்லது பேனோ அவர்களை அதிகம் படுத்தி இருக்க வேண்டும், "கோலம் இங்கே கொஞ்சம் தலையைப் பாரு" அரை ஜீவனாய் தன் மகள் பெயர் சொல்லி அவர்கள் ஒலிக்க, நெற்றிச் சுருக்கங்களை இறுக்கமாய் பற்றிக் கொண்டிருக்கும் விபூதி, விடாமல் தலையை சொறிவதால் சற்றே கொஞ்சம் மங்கித் தெரிந்தது! ஆச்சி ஒரு வைராக்கிய பெண்மணி! தெற்கில் குமரி மாவட்டத்தில் பிறந்ததனாலோ என்னவோ குமர...