Posts

Showing posts from December, 2015

ஆனந்த ஜன்னல்கள்

Image
 சென்னை காட்டுபாக்கம் அருகாமையில் மாங்காடு செல்லும் வழிதனில் நகரச் சந்தடியிலிருந்து சற்றே ஒதுங்கி பாஷ்யம் கட்டுமான குழுமத்தின் "ஆனந்த ஜன்னல்கள் (HAPPY WINDOWS )" குடியிருப்பு அமைதியாய் ஆளுமையாய் அழகாய் அமையப் பெற்றுள்ளது! மொத்தமாய் ஆறு கட்டிடங்கள் தரைத் தளம் வாகன நிறுத்தத்திற்கு, அதன் மேல் நான்கு தளங்கள் குடியிருப்பிற்கு என மொத்தம் 280 வீடுகள் ! ஒன்று, இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடுகள்! பூங்கா உடற்பயிற்சி கூடம் பல்பொருள் வளாகம் உள் விளையாட்டு அரங்கம் சூரிய சக்தி கொதிகலன்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் குடிநீர் சுத்திகரிப்பு மையம் 24மணி நேர மின்சார ஆளுமை நீச்சல் குளம் ஒன்பது நிலத்தடி நீர் கிணறுகள் ஒரு டஜன் பிரத்யேக அறைகள் நடைபயிற்சி சாலைகள் இன்னும் பலப்பல வசதிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த குடியிருப்பு உண்மையிலேயே ஆனந்தம் தவழும் ஜன்னல்களே ! மூன்றாம் கட்டிடத்தில் முதலாம் தளத்தில் அமையப் பெற்றுள்ளது இரு படுக்கையறைக்  கொண்ட என் வீடு! தெற்குப்புற வாசல் தென்கிழக்கு மூலையில் சூரியதிசை நோக்கி சமையலறை ! மூன்று பால...