அபியும் நானும் ...!
அபி என் உடன் பிறவா சகோதரி....! அபியைப் பற்றி நினைவுகூற ஒரு கால் நூற்றாண்டாவது நான் பின்னோக்கிச் செல்ல வேண்டும், பரவாயில்லை! அபிக்காக செல்லலாம்! அப்போது நாங்கள் திருச்சியில் வாழ்ந்து வந்தோம்! அபியை நான் முதன் முதலில் பார்த்தது இன்னும் எனக்குள் பிரகாசமாய் ...! அவளது தந்தையும், எனது தந்தையின் உயர் அதிகாரியுமான "திரு. சங்கரன்" சார், அவரது மனைவியும், கனரா வங்கி ஊழியருமான "திருமதி. மீனாக்ஷி" அவர்கள், "சத்ய நாராயணன்" எனும் "சதீஷ்" - அவர்களது செல்ல மகன், "நிரஞ்சனா" எனும் "அபி" - ஒரு குட்டி தேவதை...! என அந்த பிராமணக் குடும்பம் குடியேறியிருந்த வீடு, திருச்சியில் தெப்பகுளம் பார்த்த மாதிரி ஒரு அக்ரஹாரத்தில், அந்தப் பகுதியின் அதீத விசாலமானதும் மிகப் பெரிய மொட்டைமாடியினைக் கொண்டதுமாகமாய் பிரமாண்டமாகத் அப்பொழுது தெரிந்தது! அங்கே தான் முதன் முதலாய் அபியும் சதீஷும் எனக்கு அறிமுகமானார்கள்! சதீஷ் பரம சாது! அபியோ மகா வாலு! தெற்றுப்பல், பெரிய விழிகள், செம கலர், கொழுக் மொழுக் என ரகளையாய் இருப்பாள்! அடிக்கடி செல்...