Posts

Showing posts from June, 2025

அடுத்த நொடிப் பொழுதின் ஆச்சர்யங்கள்

Image
எல்லாமும் மாறிப் போகும் ஒரு நொடிப் பொழுதினில்...! வாழ்க்கை எவ்வளவு அழகானாதோ அதைவிடப் பன்மடங்கு  கோரமானதும் கூட..! தங்களது ஆதர்ச நாயகனையும் அவர்கள் வென்று வந்த வெற்றிக் கோப்பையினையும் ஒரு முறையாவது தரிசித்துவிட  கண்களில் ஏக்கத்துடனும் நெஞ்சினில் ஆர்வத்துடனும் பெங்களுர் சின்னசாமி மைதானத்தில் பரிதவித்த அந்த 11 உயிர்களுக்குத் தெரியாது  தாம் இன்னும் ஒரு சில மணித் துளிகளில்  ஜன நெருக்கடியில் சிக்கி சிதைந்து சின்னாபின்னமாகி மாயப் போகின்றோம் என்று...! தேனிலவுக்கு வந்த இடத்தில் சிரபுஞ்சி சாரலில் அருவியின் அழகை பார்த்து பரவசமடைந்து கொண்டிருந்த அப்பாவி மாப்பிள்ளைக்குத் தெரியாது நாம் இன்னும் சிறிது நேரத்தில் அக்னி சாட்சியாய் தொட்டு தாலியிட்ட மனைவியின் சதியால் படுகொலை செய்யப்படுவோம் என்று..! லண்டனில் மென்பொருள் பொறியராக ஆறேழு வருடங்கள் பணி செய்து வந்து கொண்டிருந்த தன்னுடன் இந்தியாவில் மருத்துவராய் இருக்கும் தன் மனைவியையும் பணியை ராஜினாமா செய்துவிடச் செய்துவிட்டு அழகிய மூன்று குழந்தைகளுடன் நிரந்தரமாக அங்கேயே குடியேற முடிவு செய்து கனவுகளுடன் ஆனந்தமாய் விமான உட்புறத்தில்  செல்ஃ...