கட்டுமரம்
1991 ஆம் ஆண்டு ...! பன்னிரெண்டாம் வகுப்பின் இறுதித் தேர்வில் நான் வாங்கிய மதிப்பெண்கள் மதிப்புடையதாயிருப்பினும் அண்ணன் பாரதி படித்த ஆர் இ சியில் சேருமளவுக்கு அதற்குத் தகுதியில்லை என அப்பா எனக்கு மாற்று வாய்ப்பை அமைத்துத் தராது போயினும் , கிடைத்ததே போதும் எனக் கருதி என்னை திருச்சி புனித வளனார் கல்லூரியில் இளங்கலை இயற்பியலில் சேர்த்துக் கொண்டு , மூன்று வருடங்கள் தவமாய் படித்து தனிச்சிறப்புடன் முதல் வகுப்பில் தேர்வான எனக்கு , அந்த மதிப்பெண்கள் மட்டும் என் சொந்தக் கல்லூரியிலேயே எம் சி ஏ படிப்பதற்கு உதவாது , அதற்கு பணமோ அல்லது சிபாரிசோ தேவை என்றும் அது என் அப்பாவால் கொண்டுவர முடியாது என்றும் தெரியாது ...! 1994 ஆம் ஆண்டு ...! கூடப் படித்தவர்கள் எல்லாரும் சாமர்த்தியமாய் தங்கள் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டு பயணிக்கத் துவங்கிய பொழுது திக்குத் தெரியாமல் எந்தப் பக்கம் போவது என்று நிலைதடுமாறி என் செய்வது என்று அறியாமல் பொறியியல் படிப்பினும் கடினமானதும் , கல்லூரிகளில் ...