'சின்ன'வீடு...!
சார், ' சின்ன'வீடு ஒன்று பார்த்திருக்கின்றேன்..! நான் சொன்னதும் நண்பர் என்னை ஏற இறங்க ஒருமுறை அற்பமாய் பார்க்க எனக்கோ புரிய சற்று காலம் பிடித்தது! நம் ஊரில் சின்னவீடு என்றால் அதன் அர்த்தமே தனி! அது அப்படியே இருக்க்ட்டும்! எனது புதிய சின்ன வீடு இருப்பது அடையார் இந்திரா நகரில், என் அலுவலகத்தின் வெகு அருகில், மகன் பள்ளி வளாகத்திற்கு கைதட்டும் தூரத்தில்! திரும்பிப் பார்க்கும் நேரத்தில் அவன் வளர்ந்து இதோ பத்தாம் வகுப்பு வந்து விட்டான்! அதைத் தொடர்ந்து வந்தது ஒரு அவசரம்! தேவை ஒரு வீடு, அது சிறியதாய் இருப்பின் மிகவும் உத்தமம்! அச்சிந்தனைத் துளிர் விட்டதும், ஒரிரு வாரங்களில் இந்த 'சின்ன' வீடு சற்றென்று அமைந்தது! வெறும் நான்கே குடியிருப்புகள்! தரைத்தளத்தில் கார் பார்க்கிங்! எங்களது முதல் தளம்! அண்டை வீட்டில் குழந்தை சஹானாவின் , செல்லச் சிணுங்கல்கள், வீட்டுக்காரம்மாவின் வளர்ப்புப் பிராணிகள் என, ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் நாங்கள் பயணிக்கத் துவங்கி இதோ இரு மாதங்கள் ஓடிப் போனது! காட்டுப்பாக்கம் 'ஆனந்த சன்னல்கள்' இல்லம் தற்சமயம் ஒரு சொகுசு வ...