Posts

Showing posts from May, 2015

அந்த ஏழு நாட்கள்...!

Image
முதல் நாள்: அதிகாலை 3 மணிக்கெல்லாம் புறப்பட்டு விடலாம் அம்பைக்கு என முன்கூட்டியே திட்டமிருந்ததால் வழக்கத்துக்கு மாறாகத் தூக்கம் வர மறுத்தது! ஒரு மணிக்கெல்லாம் விழித்துக் கொண்டு புறப்பட ஆயத்தமானேன்! மனோ, என் சத்தங்களின் இடையூற்றில் லேசாக அரைத் தூக்கக் கலக்கத்தோடு நடுநிசியில் பிசாசு போல் நடமாடும் என்னை அசிங்கமாய்ப் பார்த்தாள்! கலைந்தக் கூந்தலும் வெற்று நெற்றியுமாய் அழகான இராட்சஷியாய் தெரிந்தாள்! சபரி எஸ்டேட் சென்று மாமாவையும் கலாவையும் உடன் அழைத்துக் கொண்டு சென்னையிலிருந்து அம்பை நோக்கி வெர்னா காரில் ஒரு வழியாக கிளம்பினோம்! வழியில் பெரம்பலூர் தாண்டி ஆர்யா உணவு விடுதியில் அமோகமாய் காலைச் சாப்பாடு! இலவச கேசரியும், ஏழு வகை "தொட்டுக்க" வகையறாக்களும் இன்னமும் நாவில் சுவைத் தெரிகிறது ! மதியம் 12:30 மணியளவில் அம்பாசமுத்திரம் ஊர் வாயிலைத் தொட்டதும் ஏதோ ஒரு பரவசமும் கூடவே வந்து ஒட்டிக் கொண்டது! மதிய உணவை சந்திரா வீட்டில் முடித்துக் கொண்டு அகிலனையும், சபரீசையும் அழைத்துக் கொண்டு குமார் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கொட்டிக் கிடக்கும் இயற்கையின் கொள்ளை...