சென்னை முதல் தனுஷ்கோடி வரை....!
சென்னை முதல் தனுஷ்கோடி வரை....! இந்த வருடத்தின் துவக்கம் கண்டிப்பாக ஒரு வித்தியாசத் துவக்கமாகவிருக்கவேண்டுமென விரும்பி, எனது நீண்ட நாள் பிரார்த்தனையாகிய பழநி பாதயாத்திரைதனை ஆண்டின் முதல் நாள் பழநியில் காலடி படும்படி சென்ற ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதிதனில் எனது யாத்திரைதனை துவக்கினேன் ! விரும்பியபடி 01.01.2014 அதிகாலை 3.00 மணியளவில் பழனி சென்று அடைந்தேன்! பால தண்டாயுதபாணியை தரிசனம் செய்தேன்! அதனைத் தொடர்ந்து நகரத்தார் கோவில்கள் ஆகிய பிள்ளையார்பட்டி, அரியக்குடி, குன்றக்குடி திருத்தலங்களுக்கும், செட்டிநாடு நகரங்களாகிய காரைக்குடி மற்றும் தேவகோட்டைக்கும் விஜயம் செய்து, இறுதியாக இராமநாதபுரம், மண்டபம், இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ஆகிய ஊர்களுக்கும் சென்று வந்தேன்! ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு ஞாபகம்! பலப் பல அனுபவம்! நகரத்தாரின் கட்டிட கலை நுணுக்கங்கள் என்ன; இராமேஸ்வர பாலத்தின் பிரமிப்பு என்ன; தனுஷ்கோடி கிராமத்தின் ஆறா வடுக்கள் என்ன என்ன...! காரைக்குடியில் நான் படித்த பள்ளியை பார்த்த போது ஒரு இனம் ...