என்றென்றும் உன் நினைவுகளில் . . . !
பாரதி! அப்பாவின் மூத்த மகன்! அம்மாவின் செல்ல மைந்தன்! தம்பி தங்கைகளின் அன்புச் சகோதரன்! எங்களுக்கு எல்லாமுமாம் இருந்தவன்! முப்பது வயதுக்கு முன்பே இறந்தும் போனவன்! பாரதி யாரவன்? அவன் ஒரு தனி மனிதன் மட்டும் தானா? இல்லை! இல்லை! அவன் ஒரு சரித்திரம் தாண்டிய சகாப்தம்! ரத்தமும் சதையுமாய் இயங்கி வந்த ஒரு உன்னத மனிதனை காலன் அவசர அவசரமாய் அழைத்துக் கொண்டு போய் இதோ வருடங்கள் பதினான்கு ஓடிப் போய்விட்டன! அப்பா தான் அவனுக்கு எல்லாம்! அவனை அப்பாவும், அப்பாவை அவனும், உயிருக்கு உயிராய் நேசம் செய்தது கூடவே இருந்த எங்களுக்குத் தான் தெரியும்! அப்பா, தன மகன் என்னவெல்லாம் ஆக வேண்டுமென கனவு கொண்டிருந்தாரோ, எல்லாவற்றையும், ஒன்று விடாமல் செய்து முடித்தான் என்றால் அது மிகையில்லை! தேவகோட்டையில் "டி பிரிட்டோ", காரைக்குடியில், "எல் எப் ஆர் சி " குழித்துறையில் அரசுப் பள்ளி! திருச்சியில் உருமு தனலக்ஷ்மி மற்றும் புனித வளனார் பள்ளி ...! என அவன் படித்த பள்ளிகளில் எல்லாம் வகுப்பில் முதல் மாணவனாய்த் திகழ்ந்தது மட்டுமின்றி, கலை இலக்கிய போட்டிகளிலெல்லா...