Posts

Showing posts from 2013

என்றென்றும் உன் நினைவுகளில் . . . !

Image
 பாரதி! அப்பாவின் மூத்த மகன்! அம்மாவின் செல்ல மைந்தன்! தம்பி தங்கைகளின் அன்புச் சகோதரன்! எங்களுக்கு எல்லாமுமாம் இருந்தவன்! முப்பது வயதுக்கு முன்பே இறந்தும் போனவன்! பாரதி யாரவன்? அவன் ஒரு தனி மனிதன் மட்டும் தானா? இல்லை! இல்லை! அவன் ஒரு சரித்திரம் தாண்டிய சகாப்தம்! ரத்தமும் சதையுமாய் இயங்கி வந்த ஒரு உன்னத மனிதனை காலன் அவசர அவசரமாய் அழைத்துக் கொண்டு போய் இதோ வருடங்கள் பதினான்கு ஓடிப் போய்விட்டன! அப்பா தான் அவனுக்கு எல்லாம்! அவனை அப்பாவும், அப்பாவை அவனும், உயிருக்கு உயிராய் நேசம் செய்தது கூடவே இருந்த எங்களுக்குத் தான் தெரியும்! அப்பா, தன மகன்  என்னவெல்லாம் ஆக வேண்டுமென கனவு கொண்டிருந்தாரோ, எல்லாவற்றையும், ஒன்று விடாமல் செய்து முடித்தான் என்றால் அது மிகையில்லை! தேவகோட்டையில் "டி பிரிட்டோ", காரைக்குடியில், "எல் எப் ஆர் சி " குழித்துறையில் அரசுப் பள்ளி! திருச்சியில் உருமு தனலக்ஷ்மி மற்றும் புனித வளனார் பள்ளி ...! என அவன் படித்த பள்ளிகளில் எல்லாம் வகுப்பில் முதல் மாணவனாய்த் திகழ்ந்தது  மட்டுமின்றி, கலை இலக்கிய போட்டிகளிலெல்லா...
Image
கடவுளின் சொந்த நாடு ! சமீபத்தில் கேரளா சென்று வந்தேன்! ஒரு வேலை நிமித்தமாக, எர்னாகுளம் வரை ! நண்பர் ராஜேஷ் அவரது "புதுசேரி இல்லத்தில்" தங்கிக் கொண்டு, கேரளாவின் முக்கிய சில பகுதிகளை கண்டு வந்தேன்! குருவாயூர் கோவில், மமியூர் கோவில், அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி, வாழச்சால் நீர்வீழ்ச்சி , குமரகம் ஏரி, கொச்சி துறைமுகம், "லு லு" மால், சாவக்காடு கடற்புறம் என்று சுற்றி வந்தேன்! கேரளா! பிரபஞ்சத்தின் பிராணவாயு உற்பத்தியாகும் பிரதேசம் எனலாம்! எங்கெங்கு காணினும் இயற்கை, சிறுமியாய் , குமரியாய், அழகியாய் , ராட்சஸியாய், அழகிகளின் அவதாரங்களாக என்னை படுத்தி எடுத்தது என்பதே உண்மை! போய் வாருங்கள்! புத்துணர்வு நிச்சயம்!

என் பார்வையில் " கடல்"

Image
                                                        சமீபத்தில் வெளியான கடல் திரைப்படம் பற்றிய பல தரப்பு விமர்சனங்களைப் படித்து மனம் கலங்கி, என் ஆதர்ச நெறியாளுனர் திரு. மணிரத்தினம் அவர்களது ஆத்மார்த்த ரசிகனாய் எனது கருத்துக்களை பதிவு செய்வது கடமையென உணர்கிறேன். கடல் . . . . !  சமுத்திரம் எவ்வளவு ஆழமும், கொந்தளிப்பும், சீற்றமும், அழகும் மற்றும் அமைதியும் கொண்டதோ அது போலவே இத்திரைப்படமும் என்பதே என் வாதம். புனித விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ள பெரும்பான்மை கருத்துக்களை எனக்குத் தெரிந்து இத்துனை நேர்த்தியாக எவராலும், காட்சி ஊடகத்தில், திறம்பட சொல்லியிருப்பர்களா என்றால் இல்லை என்பதே உண்மை! சம காலத்துடன் பொருத்தி, கதையின் தன்மைக்கேற்ப பின்புலத்தில், நிஜக் கடலையே ஒரு கதாபாத்திரமாய் உருவாக்கி, அதன் நிற ...