"கார்"காலம்
புலி வருது; புலி வருது போல், இந்தோ வருது; அந்தோ வருதுன்னு, எனக்கும் கொஞ்ச நாள்ல காரும் வரத்தான் போகிறது போல! நினச்சா பெருமையா இருந்தாலும்; கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது முக்கியம்னு உள்ளூர மனசு சொன்னாலும், வாய்னு ஒன்ணு கீதே! அது சும்மா கிடக்காம, சாதி சனம் எல்லார் கையிலயும் சொல்லிக்கினு தான் திரியுது! அல்லாம் சரி, நிஜமாலுமே காரு வந்துட்டா...! நம்ம ஆதம் தெருவுல, எங்கே கொண்டு போயி அப்பால நிறுத்தறதுன்னு, ஒரே கவலையா கீதுபா! பேசாம காரு பார்கிங்கோட ஒரு வீட்ட பாத்துடலாம்னா, வாடகை மவனே எக்குத்தப்பா கீது! இன்னா பண்றது??? நயினா, யாராவது ஒரு நல்ல ஐடியா கொடுங்கபா! புண்ணியமா போகும்! "நயினா, காரு தானே வேணும், இந்தா பிடின்னு" மவன் அகிலன் ஒரு விளையாட்டு கார கையில கொடுக்கவும், நமக்கு லேசா மயக்கம் தெளிஞ்ச மாதிரி இருந்துச்சு! மெய்யாலவும், காரு வரத்தான் போகுதா?????